கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 18 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 43,849 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 6,626 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் 66 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றனர்.

அதேவேளை  இன்று காலை அபுதாபியில் இருந்து மேலும் 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

நாட்டிற்கு வருகை தந்த அவர்களை கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மற்றொரு குழு இன்று பிற்பகல் இந்தியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.