ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேர் கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பகுதி மற்றும் பொரள்ளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு 6 சந்தேக நபர்களும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் அவர்களிடம்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.