அங்கொட லொக்காவின் மனைவியின் வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபா பணம் !

22 Sep, 2020 | 06:58 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

இந்தியாவுக்கு தப்பியோடிய நிலையில், அங்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக நம்பப்படும் பிரபல பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா எனும் மத்துமகே லசந்த பெரேராவின் மனைவியின் வங்கிக் கணக்கொன்றில் உள்ள 2 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தொகை தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த நிசங்சலா என்பவரின் வங்கிக் கணக்கு தொடர்பிலேயே இவ்வாறு விஷேட விசாரணைகளை  தாம் ஆரம்பித்துள்ளதாக,  நுகேகொடை வலய குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்ருக்கு விஷேட  முதல் தகவல் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளனர்.

 இதேவேளை அங்கொட லொக்காவின் மிக நெருங்கிய சகாவாக கருதப்படும், தற்போது டுபாய்க்கு தப்பியோடியுள்ளதாக நம்பப்படும்  பலித்த பிரியங்கர என்பவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும்  விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையார்கள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். 

அத்துடன் மற்றொரு சகாவான  தற்போது கைது செய்யப்பட்டுள்ள ' சிம்பு சமன் ' எனப்படும்  நபரின்  வங்கிக் கணக்கு தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

 பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் ஊடாக சம்பாதிக்கப்பட்ட கறுப்புப் பணம் தொடர்பில் இடம்பெறும் விஷேட விசாரணைகளில் ஒரு பகுதியாக மேற்படி விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20