பாபநாசம், தம்பி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் தயாராகும் 'திரிஷ்யம் 2 ' படத்தின் படப்பிடிப்பு என்று பூஜையுடன் தொடங்கியது.

மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் த்ரிஷ்யம். இந்த படம் தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றியை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.

பல மொழிகளில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் பாகத்திலும் மலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் படப்பிடிப்பில் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.