மிஷ்கினின் பிசாசு 2

Published By: Digital Desk 4

22 Sep, 2020 | 07:03 AM
image

தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக 'பிசாசு 2 ' படத்தை இயக்க விருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

'கருப்பு கண்ணாடி' புகழ் இயக்குனர் மிஷ்கின் 'சைக்கோ' படத்தை தொடர்ந்து அடுத்ததாக பேய் படத்தை இயக்கவிருக்கிறார். ராக்போர்ட் என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிக்கும் 'பிசாசு ' படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்குகிறார். இதில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

இதுதொடர்பாக மிஷ்கின் பேசுகையில்,' 'பிசாசு படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற சில அம்சங்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் இடம்பெறும். ஆனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பயங்கரமாக அச்சுறுத்தும். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர்கள் மற்றும் உடன் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்' என்றார்.

அருண் விஜய் நடிப்பில் அஞ்சாதே 2, சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் பெயரிடப்படாத ஒரு படம்... என்ற அறிவிப்பை போல், இப்படத்தின் அறிவிப்பும் ஏமாற்றம் அளிக்காமல் இருந்தால் மகிழ்ச்சி என்கிறார்கள் ரசிகர்கள்.

இதனிடையே மிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பங்கு பற்றியது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகநூல் காதலின் விபரீதத்தை விவரிக்கும் 'ரகசிய...

2025-12-15 16:01:04
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும்' பராசக்தி ' படத்தின்...

2025-12-15 15:42:35
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத...

2025-12-15 15:33:35
news-image

இந்திய மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தொடங்கி...

2025-12-15 15:25:37
news-image

மகா சேனா - திரைப்பட விமர்சனம்

2025-12-13 15:47:09
news-image

டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் பார்வதி...

2025-12-13 15:16:44
news-image

அருண் விஜய் நடிக்கும் 'ரெட்ட தல'...

2025-12-13 15:13:47
news-image

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'மெஜந்தா'...

2025-12-13 15:09:32
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட விக்ரம் பிரபு...

2025-12-12 18:14:32
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும்'ஆர்யா 40' படத்...

2025-12-12 18:12:33
news-image

பின்னணி குரல் பதிவு பணியில் பரபரப்பாக...

2025-12-12 18:10:46
news-image

சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் 'ராசாதி...

2025-12-12 18:09:02