பிரான்ஸில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை மாலை அந்­நாட்டின் தேசிய சுதந்­திர தின­மான பாஸ்டில் தினக் கொண்­டாட்ட நிகழ்வின் போது கூடி­யி­ருந்த கூட்­டத்­தி­னரின் மீது டிரக் வண்­டியை மோதி நடத்­தப்­பட்ட தாக்­குதல் குறித்து உலகத் தலை­வர்கள் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.

அந்தத் தாக்­கு­தலில் குறைந்­தது 84 பேர் பலி­யா­கி­யுள்ளதுடன் 100 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்துள்ளனர்.

அது ஒரு பயங்­க­ர­மான தீவி­ர­வாத தாக்­கு­த­லாக தோன்­று­வ­தாக தெரி­வித்­துள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, மேற்­படி தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து பொறுப்­பா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு பிரான்­ஸுக்கு உதவப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார்.

அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் ஜோன் கெரி விடுத்­துள்ள செய்­தியில், இந்தத் தாக்­குதல் சம்­ப­வத்தால் துய­ர­டைந்­துள்ள பிரான்ஸ் மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா உறு­து­ணை­யாக தொடர்ந்து இருக்கும் என உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அதே­ச­மயம் பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ள தெரேஸா மே, மேற்­படி தாக்­கு­தலை பயங்­க­ர­மான சம்­ப­வ­மொன்று எனக் குறிப்­பிட்டு அதனால் தான் அதிர்ச்­சியும் கவ­லையும் அடைந்­துள்­ள­தாக கூறினார்.

ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர்கெல் விடுத்த செய்­தியில், பிரான்ஸின் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டத்தில் தனது நாடு பக்க பல­மாக செயற்­படும் எனத் தெரி­வித்­துள்ளார்.

இது மிரு­கத்­த­ன­மான தாக்­குதல் என ஐக்­கிய நாடுகள் சபை குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­துடன் இந்த தாக்­கு­த­லுக்கு கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் டூரோ, துருக்­கியப் பிர­தமர் பினாலி யில்ட்றிம், ஐரோப்­பிய சபைத் தலைவர் டொனால்ட் ரஸ்க், பிரே­சி­லிய இடைக்கால ஜனாதிபதி மிசெல் டெம்பர், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், ஈக்குவடோர் ஜனாதிபதி ராபெயல் கொர்ரியா உள்ளடங்கலான பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.