கொல்கத்தாவுக்கு இவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் - கவாஸ்கர் வலியுறுத்தல்

21 Sep, 2020 | 04:29 PM
image

கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிக்கு தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இங்கிலாந்தின் இயொன் மோர்கனை தலைவாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவரான சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

.பி.எல்போட்டியில் 2 முறை சம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

தினேஷ் கார்த்திக் 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். கெளதம் கம்பீருக்கு பதிலாக அவர் அந்த பொறுப்பை ஏற்றார். 2018 இல் அவரது தலைமையிலான கொல்கத்தா அணி பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியது.

ஆனால் கடந்த முறை கொல்கத்தா அணி 5 ஆவது இடத்தை பிடித்ததுதினேஷ் கார்த்திக்கின் துடுப்பாட்டமும்சிறப்பாக அமையவில்லைஅவர் 14 போட்டிகளில் 253 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

35 வயதான தினேஷ் கார்த்திக், இம்முறை ஐ.பி.எல்போட்டியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வேட்கையில் உள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இங்கிலாந்தின் மோர்கனை தலைவராக நியமிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து  அவர் மேலும் கூறுகையில்,

“கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வரிசை துடிப்பாகவும்எல்லோரையும் கவரும் வகையில் உள்ளதுமோர்கன் மத்திய வரிசையில் மிகப்பெரிய பலமாக இருப்பார்அவர் நிலையாக துடுப்பெடுத்தாடக்கூடியவர்அனுபவம் வாய்ந்தவர்அவர் ஒரு அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.

கொல்கத்தா அணி இம்முறை முதல்  4,  5  போட்டிகளில் சிறப்பாக செயற்படாவிட்டால் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மோர்கனை தலைவராக நியமிக்க வேண்டும்இதற்கான வாய்ப்பு  எப்போதும் உள்ளது” என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right