பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்டெப் தோட்ட மேற்பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 

பசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து  அப்பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவரையும் பெருந்தொகையான கசிப்பையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உதவி பொலிஸ் அதிகாரி  தலைமையிலான குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

எல்டெப் தோட்ட மேற்பிரிவில் நீண்ட காலமாக இடம்பெறும் கள்ளச்சாராயப் பாவனையால் பலர் மதுவிற்கு அடிமையாகியுள்ளதுடன், குடும்ப சமூக ரீதியான பிரச்சினைகளால் குடும்பங்கள் பல்வேறு சமூக சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலையும், விசனமும் வெளியிடுகின்றனர்.

இப்பகுதியில் சட்ட விரோத மது விற்பனையை தடை செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.