மட்டு வீதி விபத்தில் ஒருவர் பலி - மூவர் படுகாயம்

Published By: Digital Desk 4

21 Sep, 2020 | 12:47 PM
image

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் இன்று  திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர்  பலியானதோடு மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சித்தாண்டி திருநாவுக்கரசு வீதியை அண்டி வசிக்கும் நாகராசா சதீஸ் (வயது 22) என்பவரே பலியாகியுள்ளார்.

மேலும், மாவடிவெம்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ். சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) கருணாகரன் தனுசன் (வயது 26) ஆகியோர் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலுள்ள மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் படுகாயமடைந்த எஸ். சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, 

நெடுஞ்சாலையில் இரு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இடறுப்பட்டு நேரெதிரே  மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்வேளையில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லொறியொன்றும் பயணம் செய்ததால் அந்த லொறியையும் கைப்பற்றி அதன் சாரதியிடமும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34