ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் நடாத்தப்படும்  ஐந்தாவது உலக வன வார நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த இத்தாலி செல்லவுள்ளார்.

குறித்த மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் எதிர்வரும் 18 ஆம்  திகதி தொடக்கம் 22 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பதிலாக குறித்த மாநாட்டில்  கலந்துக்கொள்வதற்காக சுசில் பிரேமஜயந்த செல்லவுள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மாநாட்டில் ஜனாதிபதிக்கு பதிலாக விசேட உரையொன்றை எதிர்வரும் 18 ஆம் திகதி சுசில் பிரேமஜயந்த நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.