கம்பஹாவின் சில பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல்  வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று இரவு எட்டு மணி முதல் குறித்த 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, தெலங்கபாத்த, எவரிவத்தை, ஏகித்தை, பள்ளியாவத்தை, மற்றும் எலக்கந்தை ஆகிய பகுதிகளுக்கே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.