கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்ட நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று காலை(21.09.2020) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் வைத்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்விபத்தில், மலயாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.