ஹொரவல - பிட்டிகல வீதியில் மீகஹதென்ன பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர், மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

44 வயதான மீகஹதென்ன கல்முல்ல பிரதேசத்தைந் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.