சுப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டில்லி கெபிட்டல்ஸ் அபார வெற்றி

Published By: Priyatharshan

21 Sep, 2020 | 06:14 AM
image

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 2 ஆவது போட்டி செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இடம்பெற்றது.

இப்போட்டியில், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டில்லி கெபிட்டல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேரினர்.

 

டில்லி கெபிட்டல்ஸ் சார்பாக 4 ஆவது விக்கெட்டுக்கு அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ரிஷப் பண்ட் 31 ஓட்டங்களுடனுட் ஷ்ரேயாஸ் ஐயர் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில்  சகலதுறை ஆட்டக்காரர் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். அவர் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைச்சதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ஓட்டங்களை குவித்தார்.

இறுதியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை குவித்தது.

பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

ஆரம்ப ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் டில்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்களை எடுத்து தடுமாறியது.

மயங்க் அகர்வால் தனியாக போராடினார். கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சராக விரட்டினார். அவர் இறுதி வரை போராடினார். அகர்வால் 60 பந்தில் 89 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் டில்லி கெபிட்டல்ஸ் சார்பில் ரபடா, அஸ்வின் மற்றும் ஸ்டெய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டகளை வீழ்த்தினர்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை எடுத்ததினால் ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது. 

இதையடுத்து, சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. டில்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய டில்லி கெப்பிட்டல்ஸ் அணி 3 ஓட்டங்களை பெற்று சுப்பர் ஓவரில் அபார வெற்றிபெற்றது.

 இப் போட்டியில் வெற்றிபெற்ற டில்லி கெபிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளைப் பெற்றது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 21 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் இடம்பெறும் 3ஆவது போட்டியில், டுபாயில் டேவிட் வோனர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் சலன்ஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11