டில்லி கெபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணச் சுழற்சியில் வெற்றிபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 2 ஆவது போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இடம்பெறுகின்றது.

இப்போட்டியில், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டில்லி கெபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

அணி வீரர்களின் விபரங்கள் வருமாறு,

டில்லி கெபிட்டல்ஸ் 

பிரிதிவி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் கெட்மெயர், ஷ்ரேயாரஸ் ஐயர் (அணித் தலைவர் ), ரிஷாப் பந், மார்க்கஸ் ஸ்டெய்னிஸ், அக்ஷர் பட்டேல், அஸ்வின், கஹிசோ ரபடா, அன்ரிச் நோர்டிஜ், தொஹிந் சர்மா

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கே.எல். ராகுல் ( அணித்தலைவர் ), மயன்க் அகர்வால், கருண் நயர், சப்ராஸ் கான், கிளன் மெக்ஸ்வெல், நிகொலஸ் பூரான், கௌதம், கிரிஸ் ஜோர்தான், ரவி பிஸ்சோனி, மொஹமட் சமி, செல்டன் கொட்ரீல்