மனம் திறந்த கபாலி திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் - சிறப்பு நேர்­காணல்

Published By: Raam

16 Jul, 2016 | 02:43 PM
image

நேர்காணல் : குமார் சுகுணா

தான் என்ற சுய­ந­லத்தில் வாழ்பவன் வெறும் மனி­தன் என்ற அடை­யாளம் மட்­டுமே கொண்­டவன். ஆனால் தனது சமூகம் என்ற சுய­ந­லத்­துடன் வாழும் மனிதன் வர­லா­ற்றை மாற்று­கின்றான். வர­லாறாகவும் மாறு­கின்றான். ஆட்­டு­மந்­தைகள் போல சக மனி­தனை பார்க்கும் ஒரு சாபக்கே­டான சமூ­கத்தில் நாம் வாழ்ந்­து ­கொண்­டி­ருக்­கிறோம். 

இந்த மன­நிலை மாற வேண்டும். குப்­பத்தில் பிறந்­தாலும் கோடி பணம் நிறைந்த மாடியில் பிறந்­தாலும் மனிதம் ஒன்றே என்­பதை அம்­பேத்கார் நகரிலி­ருந்து வந்­து இந்த நூற்­றாண்டின் மிக பெரிய ஊடகமான சினி­மாவில் தன் கம­ரா மூலம் பேசிக்­கொண்­டி­ருக்­கும் இளம் இயக்­குநர் பா.இரஞ்சித், இது­வரை தமிழ் சினி­மா­வில் இருந்த மர­பு­களை உடைத்­து எந்த கமா­ரவும் பேசத்துணி­யாத விளிம்­பு­நிலை மக்­களின் குர­­லை தன் படைப்­பு­க­ளாக வெளிப்­ப­டுத்தி வரு­வதோடு தனது மூன்­றா­வது திரைப்­படமான கபாலி திரைக்கு வரும் முன்­னரே உலக­த்தை தன் பக்கம் திசை திருப்­பி­யுள்ளார். எதிர்­வரும் 22ஆம்­ தி­கதி நடிகர் ரஜினி­காந்தின் நடிப்பில் உரு­வா­கி­யுள்ள கபாலி திரைப்­படம் பலத்த எதி­ர்பார்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் உல­கம்­ முழுவதும் திரை­யி­டப்­ப­ட­வுள்­ளது. இதனை முன்­னிட்டு இயக்­குநர் பா.இரஞ்சித் வீரகேச­ரி இணையத்தளத்திற்கு வழங்­கிய சிறப்பு நேர்­காணல்.....

திருவள்ளூர் மாவட்டத்தில் களம்பாக்கம் எனும் சிற்­றூரில் பிறந்த நீங்கள் எப்­படி சினி­மா­வுக்­குள் ஈர்க்­கப்­பட்­­­டீர்­கள் ?

பதில் : எனது தாய்­மா­மன்­மார்கள் இருவர் ஓவிய கல்­லூ­ரியில் கல்­வி பயின்­றனர். அப்­போதே எனக்கும் ஓவியம் மீது ஈர்ப்பும் ஆர்­வமும் ஏற்­பட்­டது. நான் ஒடுக்கு முறை­க­ளுக்கு உள்­ளான ஒரு சமூ­கத்தி­­லி­ருந்து வந்­தவன். இதன்­போது ஓவி­யத்­தின் மூல­மாக சமூக பிரச்­சி­னை­களை தட்டிக் கேட்­க­மு­டியும் என உணர்ந்தேன். நானும் ஓவியக் கல்­லூரியில் இணைந்தேன். 1 ஆம் ஆண்­டி­­லி­ருந்து 4 ஆம் ஆண்­டு­வரை ஆர்ட் டைரக்­ட­ராக வர­வேண்டும் என்­பதே எனது குறிக்­கோ­ளாக இருந்­தது. அப்­போது ஓவியர் சந்­துரு மிகப் பெரிய கலை­நு­ணுக்­கங்­களை எனக்கு கற்­றுத்­தந்தார். நான் கல்­லூ­ரியில் கல்வி பயின்­ற­போது எமது கல்­லூரியில் பிலிம் பெஸ்­டிவேல்ஸ் நடைபெறும். இதன்­போது உலக தரம் வாய்ந்த பாரம்பரியமிக்­கதும் சமூக பிரச்­சி­கைளை வெளிப்ப­டுத்தும் திரை­ப்­­ப­டங்களும் திரை­யி­டப்­பட்டன. இதனை பார்த்­த­போது இது போன்ற திரை­ப்ப­டங்­களை ஏன் நமது சமூ­கத்­திற்­காக நாம் எடுக்க கூடா­து. சினி­மா என்­பது ஓவி­யத்தை விட பெரிய ஊடகம் இதன் மூலம் நமது சமூக பிரச்­சி­னையை தட்­டி­க்கேட்ட முடியும். நமது மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் தெளிவாக வெளிப்ப­டுத்த முடியும் என நினைத்தேன். அதன் வெளிப்பாடே என்னை இயக்­குநராக்­கி­யது.

உங்­களின் மூன்­றா­வது திரைப்­ப­டத்­திலேயே தமிழ் சினி­மாவின் உச்ச நட்­சத்­தி­ர­மான நடி­கர் ரஜி­னி­காந்­தை இயக்கும் வாய்ப்பு எப்­படி இவ்­வ­ளவு எளிதில் கிடைத்தது?

பதில் : என்­னு­டைய அட்ட­கத்தி மற்றும் மெட்ராஸ் திரை­ப்ப­டங்­கள் வெளியா­கி­ய­போது ரஜினி சேர் எனக்கு போன் பண்ணி வாழ்த்து தெரி­வித்­தார். மெட்­ராஸ்ஸ பாத்­துட்டு ''சூப்பர் கண்ணா நல்லா பண்­ணி­ருக்­கனு'' சொன்னார். அது ரொம்ப சந்­தோ­­ஷமா இருந்­தது. ஒரு நாள் அவர் மகள் சௌந்­தர்யா எனக்கு போன் பண்ணி ரஜினி சேர்­ படம் பன்­றது பத்தி கேட்­டாங்க. நான் அத எதிர்­பார்க்­கவே இல்ல. அதிர்ச்சி ஆகிட்டேன். நான் கோவா படத்­துல அசிஸ்டெண்ட் டய­ரெக்­டரா வேர்க் பண்­ணும் போதே செளந்­தர்யா அந்த படத்தோட தயா­ரிப்­பா­ளரா இருந்­தாங்க. அப்போ என் அட்டகத்­தி­ய அவங்­கத்­தான் தயா­ரிப்­ப­தாக முதல்ல இருந்­தது.

கபாலி திரைப்­படம் வெளியா­வ­தற்கு முன்­னரே இது­வரை ரஜினியின் எந்த திரைப்­ப­டத்­துக்கும் கிடைக்காத ஒரு வர­வேற்பு உலக ரசி­கர்­க­ளிடம் கிடைத்துள்­ள­து, டீசர் 2 கோடி பார்­வை­யா­ளர்­­களை தாண்­டி­­யுள்­ளது. உங்க­ளது மன­நிலை எப்­படி இருந்­த­து? இதை எதிர்­பார்த்­தீர்­க­ளா? இதற்கு பிற­­கு படத்தின் எதிர்­பார்ப்பும் ரசிகர்­க­ளிடம் அதி­க­ரித்ததுள்ளது. இது தொடர்பில்....

பதில் : இவ்­வ­ளவு பெரிய வர­வேற்பை நான் எதிர்­­பார்க்­கல. ஆனால் ஒரு­வ­ருட உழைப்­புக்­கான பெறு­ம­தியை திரைப்­ப­டத்தில் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது உணர்ந்தேன். நாற்­கா­லியில் ரஜினி அமர்ந்­தி­ருக்கும். அந்த போஸ்­ட­ருக்கு மிகப் பெரிய வர­வேற்ப்பு கிடைச்­சது. அப்­போதான் நாம சரி­யாதான் வேலை பண்றோம் என்ற நம்­பி­க்கை வந்­துச்சி. ஆனால் டீசர் வெளியிடும் போது பயமா இருந்­துச்சு. ரஜினி சேர் படம்னா ரசி­கர்­க­ளிடம் எதி­ர்­பார்ப்பு அதி­கமா இருக்கும். என்­னோட திரைப்­ப­டங்கள் சமூகம், அர­சியல் பத்தி பேசும். ஆனால் ரஜினி சேரின் வழ­மை­யான திரைப்­ப­டங்கள் கொமர்­ஷி­யலா இருக்கும். மக்கள் இத ஏத்­து­பாங்­க­ளானு பயமா இருந்­துச்சி. மிக சவா­லாக இருந்­தது. இளம் இயக்­குநர் ரசி­கர்­க­ளிடம் எதிர்­பார்ப்பு அதி­கமா இருக்கும்னு ரஜினி சேரே சொன்­னாங்க. ஆனால் என் திரைக்க­தையில் ரஜினியை கபா­லி­யாக இயக்க வேண்டும் என்று நினைத்தேன். அது முடிஞ்­சுது. டீசர் வெளியா­கும் போது பயமா இருந்­தது. ஆனால் இவ்­வ­ளவு பெரிய வர­வேற்பை நானும் எதிர்­பார்க்­கல. ரஜினி சேரும் எதிர்­பார்க்­கல.

ரஜினியை இயக்­கி­ய அனு­ப­வம் தொடர்­பி­ல்... 

பதில் : மிகவும் இயல்­பா­னவர். முதல்ல அவர் பெரிய ஸ்டா­ராக இருந்­தாலும் இயக்­குநர் சொல்­ற­த கேட்டு நடிச்­சார். எந்த பிரச்­சி­னையும் இல்ல. அவ­ருடன் பணி புரிந்­தமை ரொம்ப ரொம்ப சந்­தோ­ஷ­மா சூப்­பரா இருந்­துச்சி.

அட்­ட­க­த்தியில் தமிழ் சினி­மாவில் இருந்த காதல் மர­பையும் மெட்­ராஸ்ல இது­வரை நாம் பார்த்த சென்னை என்பதையும் உடைத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்க்­கையை பட­மாக்­கி­யி­ருந்­தீர்கள். கபா­லியில் இது­வரை ரஜினி என்று இருந்த ஒரு மர­பு உடைக்­கப்­ப­டு­மா? 

பதில் : நிச்­ச­ய­மாக இது ஏனைய ரஜினியின் திரைப்­ப­டங்கள் போல இருக்­காது. ஆனால் எல்­லோ­ருக்கும் பிடித்த பட­மாக இருக்கும். இது மக்­களின் பட­மா­கவே இருக்கும். மக்கள் என்­பது இங்கு ரஜினி. மக்­களின் ஒட்­டு­மொத்த குர­லாக ஒருவர் அதுதான் கபாலி.

"கபாலி" தமிழ் சினி­மாவில் கொலை­கா­ரர்­க­ளையும் கொள்­ளை­யர்­க­ளையும் குறிக்கும் பெய­ரா­க­த்தானே இருக்கும் .நீங்­கள் எப்­படி அதை ஹீரோ­வாக மாற்­றி­னீர்­கள்?

பதில் : இது­வரை தமிழ் சமூகம் அப்­படி நினைச்­சிட்டு இருந்­தது. அந்த மரபை உடைத்தேன். பெரும்­பா­லான மக்­களின் வலியும் எழுச்­சி­யுமே கபாலி. கபாலினா கொலை­காரர் என்ற மரபை உடைத்தேன்.

ரஜினி படம் என்­றா­லே பிர­ப­ல கலை­ஞர்­களே பணி­யாற்­றுவர். அறிமுகப்பாடல் எஸ்.பி.பி தான் பாடு­வ­து வழமை, ஆனால், கபா­லியில் அந்­த­ளவு பிர­பல்யம் இல்லாத உங்களின் முன்­னைய திரைப்­படத்தில் உள்­ள­வர்களே பணி­யாற்­றி­யுள்ளனரே...?

பதில் : நாம் சந்­தர்ப்பம் தேடும் போது நமக்கு முன் உச்சத்தில் இருக்­க­வங்க நமக்கு சந்­தர்ப்­பம் வழங்­க­­வில்லை என்றால் குறை கூறு­வோம். ஆனால், அந்த சந்­தர்ப்­பத்தை வழங்க கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கும் போது அதனை வழங்­கனும். என்­னு­டைய படைப்பு காத்­தி­ர­மா­ன­தாக இருக்கும். மத்­த­வங்­க எதிர்­பார்ப்புக்கு பண்­ண­மு­டி­யாது. கடினமாக உழைப்பவர்களுக்கு  சந்­தர்ப்பம் கொடுக்­க­வேண்­டும். இறங்கி வேலை பண்­றாங்க. அவர்கள் தமது பணி­களை சிறப்­பா­கவே செய்­துள்­ளனர்.

உலகின் மிக பிரமாண்ட திரையரங்கான பிரான்ஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸ் கபாலி வெளியீடு தொடர்பில்....

பதில் : மகிழ்ச்சி, சந்­தோ­ஷ­மாக உள்­ளது.

இந்த நூற்­றாண்­டிலும் கூட சாதிக்காக கொலை செய்யும் அள­வுக்கு ஏன் தமி­ழக மக்­களின் மன­நிலை கொடூ­ர­மாக உள்­ள­து...?

பதில் : பிரி­ப்பு வாத அர­சியல் என்­ப­தனை நோக்­காக கொண்­ட­வர்கள் ஏழை­க­ளையும் சாதி உணர்வு கொண்ட மக்­க­ளையும் பயன்­ப­டுத்­து­கின்­றனர். சமூ­கத்தில் உயர் சமூ­கம் என்ற இருப்பை காப்­பாற்ற வேண்டும் என்­பதே அவர்­களின் நோக்கு. இதற்­காக தனது இனத்­த­வன் சாதி மற்றும் ஏழை­சாதி என பிரித்து சாதியால் உணர்ச்­சி­வ­சப்­படு­கின்ற தன்­மை உடைய மக்­களின் உணர்­வு­களை வெடித்­தெ­ழ­ செய்ய வைக்­கின்­றனர். தமது நோக்­கத்­துக்கு எதி­ரான மன­நிலை கொண்­ட­வர்கள் கொல்­லப்­ப­டுவர். சாதி மிக பெரிய விஷச்செடி­ போன்­றது. உயர் சமூ­கம் என்ற இருப்பை காப்­பாற்ற வேண்டும் என்ற முயற்சி மனி­த­னையும் மனி­தத்­தையும் அழிக்க வைக்­கின்­றது.

சமூ­கத்தில் கொலை, கொள்ளைகள் இடம்­பெ­று­வ­தற்கு சினிமாவின் தாக்­க­மே காரணம் என வெளிப்ப­டை­யான குற்­றச்சாட்­டுகள் வரு­கின்­ற­ன­வே...?

பதில் : நன்மை, தீமை என்ற இரண்­டுமே சினி­மாவில் இருக்­கின்­றது. உண்­மை­யான படைப்­பாளி சமூ­கத்­துக்கு பொறுப்பு கூற­லுடன் நடக்க வேண்டும். இந்­திய தமிழ் சமூ­கத்தில் வாழ்க்­கையை தீர்­மா­னிப்­ப­தாக சினிமா உள்­ளது. ஒருவன் தனக்கு பிடிச்ச நடிகர் மாதிரி தன்னை பாவ­ணை­செய்து அந்த கதா­­பாத்­தி­ர­மாக தன்னை மாற்­றி­க்கொள்கிறான். 

சினிமா காதலை தன் காத­லாக தன்­னுடன் இணைத்து கொள்­கிறான். சினி­மா­வில் பேசப்­ப­டு­வது வாழ்க்­கை­யாக மாறு­கின்­றது. சரா­சரி சினிமா 80 களின் பின் மாற்றம் அடைந்­துள்­ளது. இளை­ஞர்கள் தவறு செய்து வாழலாம் போன்ற திரை­ப்­ப­டங்கள் வெளியாகி அவை மக்­களின் வர­வேற்பை பெற்று மிகப் பெரிய வெற்­றி­ திரைப்­ப­டங்­க­ளாக மாறி­யுள்­ளன. என­வே, திரைப்­படம் எடுக்கும் போது எதனை சொல்ல வேண்டும் என்ற சமூக பொறுப்பு படைப்­பா­ளி­க்கு உள்­ளது.

சமூக ஏற்­றத்­தாழ்வை சினிமா சரி­செய்­யாதா...? 

பதில் : சினி­மாவால் சமூக ஏற்­றத்­தாழ்வை மாற்ற முடி­யாது. ஆனால் அவ­னது உண­ர்வை தூண்டி கேள்­வியை ஏற்­ப­டுத்த முடியும்.

அறி­முக நடி­கர்­களை வைத்­துக்­கொண்டு எப்­படி அட்­ட­கத்­தியில் வெற்­றிபெற முடிந்­­த­து...?

பதில் : நம்­பிக்கை, தன்­ன­ம்­பிக்கை.

உதவி இயக்­கு­ந­ராக யாரிடம் பணியாற்­றி­­னீர்­கள்?

பதில் : முத­லா­வ­தாக தகப்பன் சாமியில் சிவஷண்­மு­க­த்­தி­ட­மும் பின்னர் கோவா உள­்­ளிட்ட 3 திரைப்­ப­டங்­களில் வெங்கட் பிர­பு­வி­டமும் பணி­யாற்­றி­னேன். 

இன்று குருவை மிஞ்­­சிய சிஷ்யனாகி­விட்­டீர்களே? அவர்கள் உங்­களை வாழ்­த்தி­னார்க­ளா...?

பதில் : ஆம், கபாலி டீசர் பார்த்­துட்டு வெங்கட் சேர் போன் பண்ணி விஷ் பண்­ணு­னாங்க..

வெற்­றி­மா­ற­னுக்கும் பாலாவுக்கும் ஒரு பாலு மகேந்­திரா மாதி­ரி உங்­க­ளுக்கு யார்...?

பதில் : எனக்கு குரு ஓவியர் சந்­துரு தான்.. சினி­மாவில் இயக்­குநர் மகேந்­திரன் பிடிக்­கும்.

பிடித்த திரைப்படம் என்ன?

பதில் : உதிரிப்பூக்கள், பரா­சக்தி

பால­சந்தர் மத்­தி­ய வர்க்க மக்­களையும் பாரதிராஜா கிரா­மத்தையும் சினி­மா­வுக்குள் கொண்­டு­ வ­ந்­தது போல உங்கள் கமரா சாதி ரீதியான ஒடுக்­குமுறை­க­ளுக்கு உள்­ளான தலித் மக்­கள பத்தி பேசுது.. இது உங்­களின் அடை­யாளமா?   

பதில் : எல்லா­வற்­றுக்கும் பின்னால் சமூ­கத்தில் மிக பெரிய அளவில் மனித உற­வு­­க­ளு­க்கு இடையே ஏற்­ற­த்தாழ்வு உள்­ளது. ஆனால் எல்­லோ­ருமே சமம். சாதி, மதம், ஏழை – முத­லாளி, திரு­நங்கை, ஒடுக்­கப்­பட்ட சமூகம் என்ற எல்­லாமே சமம். இதைத்தான் இவர்­க­ளு­டைய பிரச்­சி­னையை நான் பேசுறேன்.

உங்­க­ளுக்கு இதற்­குமேல் ஏதாவது இலட்­சி­யம் இருக்கின்றதா...?

பதில் : கடை­சிவரை மனி­த­னாக இருக்க வேண்டும்.

ராஜீவ் கொலை பேர­றி­வா­ளன் உள்­ளிட்­டோ­ருக்காக குரல் கொடுத்­தீர்கள்.. தொடர்ந்து அவர்­க­ளது விடு­த­லைக்­காக உங்கள் குரல் ஒலிக்­கு­மா?

பதில் : தமி­ழர்­களின் சமூக பிரச்­சினை, சாதிய ரீதி­யான அடைக்­கு­முறை அனைத்­தி­லும் கலந்­து­கொள்வேன். குரல் கொடுப்பேன்.

கொமர்­ஷியல் திரைப்­ப­ட­ங்களின் வரு­கையால் நல்ல கதையும் வளரும் இயக்­கு­நர்கள் சந்­தர்ப்பம் இன்றி தங்­க­ளது கன­வு­களையும் தொலை­ப்­ப­தாக வெளிவரும் விமர்­ச­னம்?

பதில் : மாவோ ''கலை என்­பது மக்­க­ளுக்­கா­னது. மக்­க­ளுக்­காக உரு­வாக வேண்டும்'' என்­கி­றார். ஆகவே திரைக்­கதை என்­பது மக்­க­ளிடம் இருந்து மட்­டுமே உரு­வாகக்கூடி­ய­து. அது என்­டர்­டை­மன்ட்டாக இருந்­தாலும் இல்­லா­விட்­டாலும் நல்ல படமா இருந்தால் மக்­க­ளுக்கு இரண்­டுமே ஒன்­றுதான். நல்ல பட­மாக இருந்தால் பாணி ஒரு பிரச்சினை இல்லை. அது ரசி­கர்­க­ளுக்கு பிடிச்­சதா மாறினால் சந்­தோ­ஷ­மாக திரைப்­படம் முடிந்து திரை­ய­ரங்கை விட்டு வெளியே­றுவான்.   

"கபாலி" நெருப்­பு­டா பாடலை புதிய திரைப்படம் ஒன்றின் பெய­ராக வைத்­துள்­ள­ன­ரே...?   

பதில் : சந்­தோஷம் தான் 

சூர்­யா­வுடன் உங்­க­ளது அடுத்த படம் எப்­போது....?

பதில் : மெட்­ராஸூக்கு பிறகு சூர்­யா­வோட இணைய இருந்தேன். கபா­லியால் அது பிற்­போ­டப்­பட்­டது. இந்த வருட இறுயில் சூர்யாவுட­னான புதிய திரைப்­படம் ஆரம்­ப­மாகும் 

இலங்­கை ரசி­கர்­க­ளுக்கு என்ன சொல்ல விரும்­பு­றீங்க?

பதில் : சாதியை மறந்து மனி­தனை நினைங்க...  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35