கண்டி - பூவெலிகட சங்கமித்த மாவத்தையில், இன்று காலை 5 மணியளவில் தாழிறக்கச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

கண்டி - பூவெலிகட சங்கமித்த மாவத்தையில் கட்டிடமொன்று தாழிறங்கிய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த வீட்டிற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  

வீட்டின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை மாதக்குழந்தை உயிரிழந்துள்ளதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.கே.ரட்நாயக்கா தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்தக் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து , கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரில் மூவர் உயிரிழந்தும், இருவர் காயங்களுடனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மீட்பு பணிகளில் பொலிசாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.