இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்  ஒருபோதும் இரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண சபைகள் ஊடாக அரச சேவைகள் முறையாக இடம்பெறும் என்றும் கூறினார்.

அத்துடன் மாகாண சபைகள் ஊடாக அரச சேவைகள் முறையாக இடம் பெறுகிறது. ஒரு சில மாகாண சபைகளில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன அவை திருத்தம் செய்யப்பட்டு மாகாண சபைகளும் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.