நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு பெருகக்கூடிய 107 அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு பாடசாலைகள் மற்றும் இரண்டு முக்கிய அமைச்சின் கட்டிடங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வருடத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் தொடர்பான  6500 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் 4100 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

டெங்கு அபாயம் தொடர்பில் மேல்மாகாணத்திலயே அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை டெங்கு தொடர்பான பரிசோதனைகளை மேலும் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, அதற்கான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.