13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.
இலங்கை நேரப்படி இந்தப் போட்டியானது இன்றிரவு 7.30 மணிக்கு டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை இறுதி சுற்றை எட்டாத ஒரே அணியான டெல்லி அணி இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன் தயாராகியுள்ளது.
ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் என்று டெல்லி அணி அதிரடி துடுப்பாட்ட வரிசையை கொண்டிருக்கிறது.
அத்துடன் அஸ்வின், ரஹானேயின் வருகையும் அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
எனினும் ரஹானேவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கும்பிளேயின் பயிற்சியில், புதிய தலைவர் கே.எல். ராகுல் தலைமையில் களம் காணுகிறது.
அண்மையில் இங்கிலாந்து தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியில் கிளைன் மெக்ஸ்வெல்7 சிக்சருடன் அதிரடியாக சதம் அடித்தார். அவர் அதே வேகத்துடன் திரும்பியிருப்பது பஞ்சாப் அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஓவருக்கு சராசரி 5.29 ஓட்ட வீதமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டிய பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் ஐ.பி.எல்.-லிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், சர்ப்ராஸ் கான், மொஹமட் ஷமி, கொட்ரோல் என்று வலுவான வீரர்கள் அணியில் உள்ளனர்.
இவ்விரு அணிகளும் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 14 இல் பஞ்சாப்பும், 10 இல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM