மத்திய மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலையால் மஸ்கெலியா காட்மோர் தனியார் தோட்டத்தின் கல்கந்த பிரிவை சேர்ந்த 44 குடும்பங்களின் சுமார் 180 உறுப்பினர்கள் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதியிலிருந்து தற்காலிகமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர் கே.ஜி.குணதிலக்க தெரிவித்தார்.

அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்கள் குறிப்பிடுகையில்இஇவ்வாறு கடந்த பல வருடங்களாக எம்மை மழை காலங்களில் தற்காலிக இடங்களுக்கு செல்லுமாறு குறிப்பிடுகின்றனர். ஆனால் எவரும் எமக்கு உரிய தீர்வை பெற்று தருவதாக இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இக் குடும்பங்களைச் சேர்ந்த 180 உறுப்பினர்களுக்கு தோட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து அம்பகமுவா பிரதேச செயலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் உலர் உணவு வழங்கப்படும் என்று கிராம சேவகர் கே.ஜி. குணதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.