இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிபர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலநறுவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் பாடசாலையில் இருந்து விலகிச் சென்ற ஆசிரியரின் ஆவணங்களில் கையெழுத்திட இலஞ்சம் பெற்றுக்கொண்டபோதே அதிபர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரிடமிருந்து 2750 ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். 

இதேவேளை  புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் முகாமைத்துவ உதவியாளர் ஒருவர்  4500 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விவகாரத்து பெற்ற நபர் ஒருவர் மனைவிக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு தொகையை குறைத்து தருவதாக கூறி குறித்த நபரிடம் இலஞ்சம் பெற்றுள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பான விசாரணையை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.