இந்தியாவின் உத்திரபிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தல் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
அயோத்தியின் என்.எச்.- 28 என்ற நெடுஞ்சாலையில் தவறான பக்கத்தில் பயணித்த டெம்போ ஒன்றின் மீது வேகமாக வந்த லொறி மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லக்னோ, அயோத்தி மற்றும் கோரக்பூரை இணைக்கும் குறித்த நெடுஞ்சாலையின் தவறான பக்கத்தில் பயணித்த டெம்போவில் இருந்தவர்களே உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர்.
இதேவேளை உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவத்ததுடன், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு அயோத்தி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ரவுனாஹி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோஹாவல் கிராசிங் அருகே இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை 5 மணியளவில் மீனவர்கள் ஒரு குழு பத்ராஷாவிலிருந்து சரியுவின் தேம்வா காட் வரை சென்று கொண்டிருந்தபோது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் பத்ராஷா பகுதியின் பூரலகந்தர் கிராமத்தில் வசிப்பவர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM