கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் , தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும்  47  பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 43,612 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 5,922 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் 65 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.