புத்தளம் சாலியாவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  

மேற்படி இளைஞர், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனவிரக்திக்கு உள்ளாகியிருந்தார் எனவும், இதன் காரணமாகவே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. 

சாலியாவௌ இப்பலோகம, கும்புக்கல்ல பகுதியைச் சேர்ந்த விக்ரம முதியன்சலாகே திலின பெதும் பண்டார (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு துக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த இளைஞர், தனது பெற்றோருடன் வாக்குவாதப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும் காணாமல் போன குறித்த இளைஞனைத் தேடியுள்ளனர். 

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை (19) இளைஞனின் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள விளாம்பழம் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்