பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் நித்திரை செய்வதற்கு மெத்தை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மெத்தை அவரது வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வைத்திய ஆவோசனைகளுக்கு அமைய குறித்த மெத்தை வழங்கப்பட்டுள்ளது. 

நாமல் ராஜபக்ஷவிற்கு வீட்டு உணவு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாமல் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.