நினைவு கூரலை தடுக்க முடியாது ; அடிப்படை உரிமை என்கிறார் சம்பந்தன்

20 Sep, 2020 | 07:29 AM
image

(ஆர்.ராம்)

விடுதலைக்கான பயணத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும். அதனை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவுகூரலுக்கு வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் வினவியபோது அவர் அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறுதெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூருவது அனைவருக்கும் உள்ள உரிமையாகும்.

அது அடிப்படை உரிமையும் கூட. அதனை யரும் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் பல்வேறு தருணங்களில் அவ்வாறான நினைவு கூரல்களை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். அதற்கு தடைகளை ஏற்படுத்த முடியாது.

இவ்வாறான நிலையில் தற்போதைய சூழலில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவை.சேனாதிராஜா முன்னெடுத்துள்ளார். 

இவ்விதமான விடயங்களில் எம்மிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது. அதனடிப்படையில் அவர் முன்னெடுத்துள்ள செயற்பாடானது பாராட்டத்தக்கதாகும். மேலும் தொடர்ச்சியாக பொதுவிடயங்களில் ஒற்றுமையாக செயற்பட வேண்டியதும் அவசியமாகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09