நாட்டின் சில பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அலவ்வ
அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாஉல்ல, 7ஆம் கட்டை பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 துப்பாக்கி ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உருலுமுல்ல - அலவ்வ பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

தெரணியகல
தெரணியகல - மியனவிட்ட பகுதியில் சீதாவக்கபுர குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 12 வகை வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை வீதி - மியனவிட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயது மதிக்கத்தக்கவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹிக்கடுவை
கலுபே - ஹிக்கடுவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கல்கட்டஸ் வகை உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சுற்றிவளைப்பை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையக அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறு கலுபே - ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.