ஏ.வி.எம் நிறுவனமும், கே.பாக்யராஜ் இணைந்து உருவாக்கிய 'முந்தானை முடிச்சு' 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மறு உருவாக்கம் பெறுகிறது.
திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கத்தில்1983ஆம் ஆண்டில் வெளியானது 'முந்தானை முடிச்சு'. இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
37 ஆண்டுகளுக்குப் பிறகு ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி சதீஷ், இப்படத்தை அதே பெயரில் மறு உருவாக்கம் செய்கிறார். இதில் கிராமத்து நாயகன் சசிகுமார், மக்கள் செல்வி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.
முந்தானை முடிச்சு படத்தின் புதிய வெர்சனுக்கு கதை, திரைக்கதை, வசனத்தை கே.பாக்கியராஜ் எழுதியிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை, நடிகரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'ராஜவம்சம்', 'பரமகுரு', 'எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM