மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரோல் தோட்டப்பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவால், வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன. மலைநாட்டில் இன்று காலைவேளையில் கன மழை பெய்யாத போதிலும், அடுத்துவரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.