மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை வலைகளுக்குள் மறைத்து வைத்த நிலையில் படகு ஒன்றில் கடத்த முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை மன்னார் ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை(18) இரவு கைது செய்துள்ளனர்.
புலனாய்வு தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது, இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 305 கிலோ 400 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் எழுத்தூர் பகுதியை சேர்ந்த 50 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட நபரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM