Published by R. Kalaichelvan on 2020-09-19 11:26:19
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் களுத்துறை , கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு கடந்து 24 மணித்தியாலங்களில் குறித்த மாவட்டங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகிய காரணத்தினாலேயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மலையகத்தில் அதிகளவிலான மழை வீழ்ச்சி காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.