மேல் மாகாணத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 401 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் பஸ் நிலையம் , ரயில்வே நிலையம் , மயானம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போதே போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அதிகளவிலானோர் கைது செய்யப்பட்டுள்னர்.

எனினும் கடந்த சில நாட்களாக மேல் மாகாணத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பில் அதிகளவிலானோர் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.