(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் மக்களின்  நலன் கருதி  தேவைக்கேற்ப வழங்கப்படுமே தவிர ஒருபோதும் வேறுப்படுத்திக் கொடுக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இன்று அரச அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாணசபை முறைமையை இரத்து செய்ய வேண்டும் என  நான் குறிப்பிட்ட தனிப்பிட்ட கருத்தை அரசியல்வாதிகள் அரசியல் மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாற்றியமைத்து விட்டார.     அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக  மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போது நான் கடுமையாக எதிர்த்தேன். அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே கருத்துரைக்கின்றேன்

 இந்தியாவினால் 13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு,    பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு  கொண்டு  வரப்படவில்லை. அரசியல் உள்நோக்கங்களுக்காகவே 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கிக் கொள்ளப்பட்டது இதனால்  எவ்வித பயனும் ஏற்படவில்லை.

அதிகார  பரலவாக்கம் மாகாணசபைகள் ஊடாக இடம் பெற வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.  அதனை  ஒருபோதும் ஏற்க முடியாது. மாகாண சபைகள் ஊடாக  மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க அதிகாரங்கள் வழங்கப்படுமே  தவிர  ஒருபோதும்  பங்கிடப்படமாட்டாது.  அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடமே காணப்படும். இவ்விடயத்தில் உறுதியாக  உளளோம்.  என்றார்.