புதுடில்லி செப்டெம்பர் 18 (ஏ.என்.ஐ.)


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஆர்வத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தங்களது தொலைபேசி உரையாடலின் போது வெளிப்படுத்தினார்கள்.


மோடியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் நேற்று முன்தினம் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தொலைபேசி மூலமாக தெரிவித்தனர். அந்த தொலைபேசி உரையாடல்களை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு இரு தலைவர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று காலை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இரு தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி இந்தியாவுடன் ' அயலகம் முதலில் ' என்ற கொள்கையின் பிரகாரம் இருவருக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தான் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்தார். ' என்று பிரதமரின் அலுவலகம் வியாழனன்று விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இரு அயல்நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நாங்கள் கொண்டிருக்கும் உறுதியான ஆர்வத்தையும் பற்றுதறுதியையும் பிரதமர் மோடியிடம் வெளிப்படுத்திய இலங்கையின் இரு தலைவர்களும் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான கூட்டு போராட்டம் உட்பட தொடர்ச்சியான இருதரப்பு ஒத்துழைப்புக்களுக்காக தமது மெச்சுதலை வெளிப்படுத்தினர் என்றும் பிரதமர் அலுவலக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.