ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளைச் சேர்ந்த 21 வீரர்கள் மற்றும் கரீபியன் பிரிமியர் லீக்கில் விளையாடிய மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளின் வீரர்கள் சிலரும் ஐக்கிய அரபு அமீரகத்தை நேற்று வியாழக்கிழமை சென்றடைந்தனர். 

ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயிற்சிகளில் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் இவ்வீரர்களுக்கு 36 மணி நேர சுய தனிமைப்படுத்தல் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீரர்கள் எவரும் எந்த போட்டியையும் தவறவிடத்தேவையில்லை என ஐ.பி.எல். நிர்வாகிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.