ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்தும் இலங்கை விலகுவதாக எந்தவொரு கருத்தையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. 

இணையனுசரணையாளர் என்ற ரீதியில் வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாத்திரமே தெரிவிக்கப்பட்டது என அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணையிலிருந்து இலங்கை விலகப் போவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலியா ரம்புக்வெல்லா செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்ததாக நேற்றைய தினம் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,