இங்கிலாந்தின் மென்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியில் அலெக்ஸ் கேரி , கிளென் மெக்ஸ்வெல் ஆகியோரின் சதங்களால் அவுஸ்திரேலியா 2க்கு 1 என்ற கணக்கில் தொடரைக் கைAUப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஜொனி பெயார்ஸ்டோவ் (112) சதத்தால் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழந்து 302  ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 303  ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் தடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 73 ஓட்டங்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. டேவிட் வோர்னர் (24), ஆரோன் பிஞ்ச் (12), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (4), லபுசாஞ்னே (20), மிட்செல் மார்ஷ் (2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

6 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரியுடன் மெக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். துடுப்பாட்டத்தில் மெக்ஸ்வெல் 108 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 106 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இறுதியில்அவுஸ்திரேலியா 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.