சுகாதார நடைமுறைகளுடன் சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்!

18 Sep, 2020 | 03:25 PM
image

(நா.தனுஜா)

வருடாந்தம் நடைபெறும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியிருக்கின்ற நிலையில், இதன்போது கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான சுகாதார நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகவும் உன்னிப்பான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Image may contain: sky, tree, bridge and outdoor

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழமையாகும். அந்த வகையில் இவ்வருடத்திற்கான புத்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. வழமைபோன்று இம்முறையும் புத்தகக் கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இணக்கம் தெரிவித்த பின்னரே சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானோரே கண்காட்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று வருகை தருகின்ற அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் உள்நுழையும் போதும் வெளியேறும் போதும் கைகளைக் கழுவவேண்டும். அதுமாத்திரமன்றி கண்காட்சி நடைபெறும் இடத்திலும் வெளியிலும் பெரும்  எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் சுதத் சமரவீர மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் சுகாதார அமைச்சினால் அனைத்து அறிவுறுத்தல்களும் முறையாகப் பின்பற்றப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறிருப்பினும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் சுகாதாரப்பிரிவின் அதிகாரிகள் உன்னிப்பான கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01