(எம்.மனோசித்ரா)

பண்டாரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இம்மாதம் 9 ஆம் திகதி அட்டலுகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சந்தேகநபரை கைது செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவலை நகரத்தில் பண்டாவலை பொலிஸாரால் இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 50 வயதுடைய அட்டலுகம , பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

பொலிஸாரை தாக்கிய குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் நேற்று காலை கல்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். 18 , 22, 27 மற்றும் 31 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.