இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் அமெரிக்காவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜெப்ரி சனின் மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.