இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்  இழப்பிற்கு 409 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நியூசிலாந்தின் டன்டினில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதலாம் நாள் ஆட்டநேர முடிவில்  90 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 409 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலுள்ளது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி  சார்பாக மார்டின் குப்தில் 156 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் 88 ஓட்டங்களையும் மெக்குலம் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லக்மல் , பிரதீப் மற்றும் சாமிர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பிரக்வெல் 39 ஓட்டங்களுடனும் வெக்னர் ஓட்டமெதனையும் பெறாது ஆடுகளத்தில் உள்ளனர்.