புத்தளம், ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நிலப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொக்ஹோ இயந்திரம் கொண்டு நிலத்தை துப்புரவு செய்த சாரதியொருவரும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட தொழில் அதிபர் ஒருவருமே குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுல ரத்நாக்கவால் முன்னிலையில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபர்களை தலா 100 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.