ரியல் மெட்ரிட் அணிக்கு முக்கியமான கட்டத்தில் வெற்றியைத் தேடிக்கொடுத்த கெரத் பேலே, டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு செல்லவுள்ளார்.          

கால்பந்து போட்டியில் முக்கிய வீரர்களில் ஒருவராக வேல்ஸ் நாட்டின் கெரத் பேலே உள்ளார். இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்பெய்னின்  ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார்.

Could Gareth Bale Return to Spurs If He Finally Leaves Real Madrid? |  Bleacher Report | Latest News, Videos and Highlights

ரியல் மெட்ரிட் அணியின் முக்கிய எதிரி அணியான பார்ஸிலோனாவுக்கு எதிராக 251 போட்டிகளில் விளையாடி 105 கோல்கள் அடித்துள்ளார். 68 கோல்கள் அடிக்க துணை புரிந்துள்ளார். இவருடைய துணையுடன் 13 கிண்ணங்களை ரியல் மெட்ரிட் அணி வென்றுள்ளது. இதில் நான்கு சம்பியன்ஸ் லீக், இரண்டு லா லிகா, ஒரு  கோபா டெல் ரே ஆகியவை அதில் அடங்கும்.

கெரத் பேலே கடந்த சில மாதங்களுக்கு மேலான அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஆனால் களத்தில் இறங்கும் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்க வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரியல் மெட்ரிட் அணியிலிருந்து டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு செல்லவுள்ளார். அவருக்கு வருடத்துக்கு 35.59 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.