நாட்டில் கொரோனா தொற்று வைரஸில் இருந்து 17 பேர் இன்று குணமடைந்து அவர்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை நாட்டில்  3,276 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.