'சைக்கோ ' பட புகழ் நடிகை நித்யாமேனன் விரைவில் வெளியாகவிருக்கும் 'கமனம்' என்ற படத்தில் பாடகியாக நடித்திருக்கிறார். இதன் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை இணையத்தில்  நடிகர் சர்வானந்த் வெளியிட்டார்.

அறிமுக இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'கமனம்'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஸ்ரேயா சரண் நாயகியாக நடிக்கிறார். 

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 'சைலாபுத்ரி தேவி' என்ற கர்நாடக இசை பாடகியாக நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். பாடகி வேடத்தில் நடித்திருக்கும் நித்யா மேனனின் தோற்ற புகைப்படத்தை இன்று முன்னணி நடிகர் சர்வானந்த் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டார்.

ஞானசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது நித்யா மேனனின் கேரக்டர் லுக் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் இதனையும் வைரலாக்கி வருகிறார்கள்.