செப்டம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பிரெஞ்ச் பகிரங்க (ஓபன்)டென்னிஸ் தொடரிலிருந்து அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா விலகியுள்ளார்.

22 வயதான ஜப்பான் வீராங்கனையாக நவோமி ஒசாகா கடந்த சனிக்கிழமையன்று தனது இரண்டாவது அமெரிக்க ஓபன் மற்றும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

நியூயோர்க்கில் விக்டோரியா அஸரெங்காவை எதிர்த்து அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் போட்டியிட்ட அவர் 1-6 6-3 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இடது தொடை எலும்பில் ஏற்பட்ட உபதை காரணமாக அவர் பிரெஞ்ச் ஓபன் தொடரை புறக்கணித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.