வீதியைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலிப் பகுதியில் நடந்து சென்று வீதியைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய செல்லையா சுந்தரலிங்கம் என்ற வயோதிபரே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரின் மரண விசாரணையை யாழ். போதனாவின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.