வெலிகெபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டங்கல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து போர 12 ரக வெளிநாட்டுத் துப்பாக்கி 1 மற்றும் போர 12 ரக துப்பாக்கி ரவைகள் 4 ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், வெல்லாவெளி - பளுகாமம் பகுதியில் வியாழக்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்நாட்டுத் துப்பாக்கியொன்று மற்றும் போர 12 ரக துப்பாக்கி ரவை 1 ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.