கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ (Save the Children) என்ற தொண்டு நிறுவனமும் மேற்கொண்ட புதிய ஆய்வு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது, 

அதில், கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 15 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இதன் பொருள் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்றுநோயால் கூடுதலாக 15 கோடி குழந்தைகள் குழந்தைகள் வறுமையில் சிக்கியுள்ளார்கள் என்பதாகும்.

கொரோனாவுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.